Site icon Tamil News

டச்சு நெடுஞ்சாலையைத் தடுத்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டம்

டச்சு புதைபடிவ எரிபொருள் மானியங்களுக்கு எதிரான போராட்டத்தில் காலநிலை மாற்ற ஆர்வலர்கள் ஹேக் நகரில் ஒரு பெரிய நெடுஞ்சாலையைத் தடுத்தனர்,

புதைபடிவ எரிபொருள் மானியங்கள் கைவிடப்படும் வரை “தங்குவோம் அல்லது ஒவ்வொரு நாளும் திரும்பி வருவோம்” என்று உறுதியளித்து, மோட்டார் பாதையை நிரந்தரமாக முற்றுகையிடப்போவதாக அச்சுறுத்திய சில ஆர்வலர்களுக்கு எதிராக போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினார்கள்.

பல எதிர்ப்பாளர்கள் குடைகளுடன் வந்திருந்தனர் மற்றும் பொலிஸ் நீர் பீரங்கிகளுக்குத் தயாராகும் வகையில் குளியல் உடைகள் அல்லது நீர்ப்புகா கோட்களை அணிந்திருந்தனர்.

“ஏராளமான பணம் தவறான இடத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அதிக புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துபவர்கள்தான் அதிக மானியங்களைப் பெறுகிறார்கள். இது மாற்றத்தை (புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு) மெதுவாக்குகிறது,” என்று போராட்டகாரர் தெரிவித்தார்.

Exit mobile version