காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது!
காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) லண்டனில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பதாகையை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 13 இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் உள்ள சிறைக் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கிரேட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed