Site icon Tamil News

ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல் – குணதிலக ராஜபக்ச எம்.பி வைத்தியசாலையில் அனுமதி

ஆளும் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவிற்கும் சக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இந்நிலையில். கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் குணதிலக்க ராஜபக்சவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகே அவரைத் தள்ள முற்பட்ட போது குணதிலக்க ராஜபக்ச மாடிப்படியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version