Site icon Tamil News

திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : 07 பேர் உயிரிழப்பு!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் ஏழு பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நட்பு ரீதியாக மது அருந்தி கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வால்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று (15.04) அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

20 பதுக்கும் 25க்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு படுகாயம் அடைந்தனர்.

இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மஹதிவுல்வெவ பிரதேசத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் தனது குடும்பத்தாருடன் முற்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது காயமடைந்த தாயும் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிய நேரத்திற்கு கடமைக்கு வராதமையினால் பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்தமையினால் மது போதையில் இருந்த குறித்த வீரர் முற்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினரை தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version