Site icon Tamil News

லண்டனில் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் – படத்தை பகிர்ந்து கோபத்தை வெளியிட்ட பெண்

லண்டனில் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது.

பிரபல உணவகத்திற்கு சென்ற பெண் தனது 3 வயது மகனுக்கு பிடித்த உணவான சிப்ஸை கொள்வனவு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் ஆர்டர் செய்த சிப்ஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் துண்டு இருந்ததை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கடை நிர்வாகியை அழைத்து இந்த சிகரெட்டை எனது மகன் விழுங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று முறையிட்டதோடு தனது ஆதங்கத்தை வெளியிட்டார். உணவு பாதுகாப்பு அத்தியாவசியமான ஒன்று என கூறிய உணவு நிறுவனம், தங்கள் தவறை ஒப்புக் கொண்டது.

அத்தோடு இதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பெண்ணுக்கு உத்தராவதம் அளித்தனர்.

சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் இருந்ததை பெண் புகைப்படம் எடுத்து தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டார்.

Exit mobile version