Site icon Tamil News

உக்ரைனின் முதல் முறையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்!

உக்ரைன் முதன் முறையாக இன்று (25.12) கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளது. இதற்கு முன்னர் ஜனவரி 07 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியது.

பெரும்பாலான ஆர்த்தடாக்ஸ் விசுவாசிகள் ஜனவரி 7 அன்று ரஷ்யாவின் வழியில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டினர். இந்நிலையில், உக்ரைன் கடந்த ஜுலை மாதம் இயற்றிய சட்டத்தை தொடர்ந்து தற்போது முதல் முறையாக இன்று கொண்டாடியுள்ளனர்.

“அனைத்து உக்ரேனியர்களும் ஒன்றாக இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம். ஒரே திகதியில், ஒரு பெரிய குடும்பமாக என்று வொலோடிமிர் செலன்ஸ்கி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிரிகோரியன் நாட்காட்டியின்படி, உலகின் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு ஏற்ப உக்ரைன் கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version