Site icon Tamil News

தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த சீன போர் விமானங்கள்

அண்மையில் தைவானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக 40க்கும் மேற்பட்ட சீனப் போர் விமானங்கள் பறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 26 சீன விமானங்கள் தைவானின் கடல் மையக் கோட்டைத் தாண்டியதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் பயிற்சிகள் மூலம் தமது இராணுவத்தின் போரிடும் திறன் சோதிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் தைவானில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள சீனா உத்தேசித்துள்ளதாக தைவான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version