Site icon Tamil News

இஸ்ரேலுக்கான கப்பல் போக்குவரத்தை நிறுத்தும் சீனாவின் கப்பல் நிறுவனம்!

இஸ்ரேலுக்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதாக சீனாவின் கப்பல் நிறுவனமான கோஸ்கோ தீர்மானித்துள்ளது.

இஸ்ரேலுக்கான கப்பலை COSCO நிறுத்திவிட்டதாக இந்த வாரம் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இருப்பினும் சினாவின் கப்பல் நிறுவனம் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் “இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை நிறுத்துவதற்கான சீன கப்பல் நிறுவனத்தின் அறிவிப்பை தெளிவுபடுத்துவதற்கு கப்பல் மற்றும் துறைமுக நிர்வாகம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து செயல்படுகிறது” என இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது.

Exit mobile version