Site icon Tamil News

2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் இரண்டாவது நாடாக சீனா மாற முயற்சிக்கும் நிலையில், சீன அதிகாரிகள் புதன் கிழமையன்று, மனிதர்களைக் கொண்ட சந்திர பயணத்திற்கான தங்கள் திட்டங்களைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டுள்ளனர்

சீனாவின் விண்வெளி ஏஜென்சியின் (சிஎம்எஸ்ஏ) துணைத் தலைமைப் பொறியாளர் ஜாங் ஹைலியன், புதன்கிழமை வுஹான் நகரில் நடந்த விண்வெளி உச்சி மாநாட்டில் ஆரம்பத் திட்டத்தை வெளிப்படுத்தியதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த பணி, சந்திர ஆராய்ச்சி நிலையத்தை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வசதியை எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது மற்றும் நிலவு ஆய்வு பணிகள் மற்றும் பிற சோதனைகளை மேற்கொள்வது குறித்து இது ஆராயும் என்று ஜாங் தெரிவித்துள்ளார் .

இந்த பணிக்கு தயாராவதற்கு, சீன ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி உடைகள், மனிதர்களை ஏற்றிச் செல்லும் லூனார் ரோவர்கள், மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலங்கள் மற்றும் நிலவில் தரையிறங்கும் விமானங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்த்த்துள்ளார்

Exit mobile version