Site icon Tamil News

வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தடை விதித்த சீனா

சீன நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது.

எனினும் சீனாவிலுள்ள ரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறினாலும், தடைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கம் அளிக்கப்படவில்லை.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது.

இதன் விளைவாக, மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ‘ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கை கைவிடப்பட்டது. இந்தச் சூழலில், தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version