Tamil News

அரசுதுறை அலுவலகங்களில் INTEL, AMD மென்பொருட்களை பயன்படுத்த தடை விதித்த சீனா

அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் ‘இன்டெல்’ மற்றும் ‘ஏஎம்டி’ சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

China Bans AMD, Intel and Windows in Government Offices - fikrikadim

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக,சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என நம்பி உள்ளது.

Exit mobile version