Site icon Tamil News

அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி செய்த செயல்.. சர்ச்சையாகும் வீடியோ

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது.

சினிமா துறை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், உலக பணக்காரர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் என பலரும் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டிருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் நேற்று அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருக்கிறார்.

ரஜினி அவரது குடும்பத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க நிற்கும்போது, அவர்கள் உடன் வந்த ஒரு பெண்ணும் அங்கே வற, ரஜினி அவரை போ போ என கையசைத்து தள்ளிப்போய் நிற்க சொல்கிறார்.

ரஜினியின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோல ரஜினி குடும்பம் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ரஜினி குடும்பம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருக்க பணிப்பெண் அவர்கள் பின்னால் நின்று கொண்டே இருந்தது சர்ச்சை ஆனது. இடம் இருந்தும் பணிப்பெண்ணை ஏன் அமரவிடவில்லை என அப்போது நெட்டிசன்கள் விளாசினார்கள்.

Exit mobile version