Site icon Tamil News

ChatGPT வல்லுநர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் – தயார் நிலையில் நிறுவனங்கள்

செயற்கை நுண்ணறிவு, ChatGPTயில் திறமையான வல்லுநர்களுக்கு கோடியில் சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் தொழிநுட்ப துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்துள்ள அபிரிவிதமான வளர்ச்சி, மேலும் ChatGPT போன்ற ஏஐக்கள் தற்போது உள்ள உலகை ஆட்டிப்படைக்கிறது, மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையப்போகிறது, மனிதகுலத்திற்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறன் வல்லுநர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து ரெஸ்யும் பில்டர் நடத்திய ஆய்வில், 91% நிறுவனங்கள் சாட் ஜிபிடியில் கைதேர்ந்தவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருப்பதாக அந்த ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.

இதேபோல் பிசினஸ் இன்சைடர் நடத்திய ஆய்விலும் ChatGPT பற்றிய அனுபவம் மற்றும் அதில் வல்லுனர்களாக இருந்தால் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வரை கொடுத்து லிங்கிடின் இல் வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மேலும் அடுத்த ஆண்டுக்குள், 43% நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவின் (AI) நேர்காணல் மூலம் பணிகளை நிரப்ப முடிவு செய்துள்ளதாகவும் சில ஆய்வுகள் தெரிவித்தாலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நேர்காணல் நடத்தும் போது திறமையான பணியாளர்களை எடுக்கமுடியும் என அந்த நிறுவனங்கள் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களில் பார்க்கும் போது, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்கள் போலவே பேசுவது, செயல்படுவது போன்றவை மற்றும் பல மொழிகளிலும் பேசுவதால் நேர்காணலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version