Site icon Tamil News

ஒரே நாளில் 2வது முறை செயலிழந்த ‘ChatGPT’..!

உலக புகழ் பெற்ற ChatGPT இரண்டாவது நாளாக உலக அளவில் செயலிழந்துள்ளதைாக தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தில், மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் Open AI நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ChatGPT, 24 மணி நேரத்திற்குள் 2 வது முறையாக உலக அளவில் செயலிழந்துள்ளது.

இதனால் பயனர்கள் உரையாடல்களை சேமித்து வைக்கவோ அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

ஓபன் ஏஐ சிஸ்டம் ஆனது ChatGPT செயல்படுவதாக கூறினாலும், ட்விட்டரில் சில பயனர்கள் இந்த சிக்கல்கள் மீண்டும் இருப்பதாக புகார் அளித்து வருகின்றனர்.

மேலும், டவுன்டெக்டர் எனப்படும் பிரபலமான பயன்பாடுகளின் செயலிழப்புகள் மற்றும் சிக்கல்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் சேவையும் புகார்கள் அதிகமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, ChatGPT-யானது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் செயலிழந்த நிலையில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version