Tamil News

கமல்ஹாசனின் சகோதரன் சாருஹாசன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி..

நடிகர் கமல்ஹானின் அண்ணனும், சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கும் இவருக்கும் 23 வயது வித்தியாசம்.

இவருக்கு தற்போது 93 வயது ஆகிறது. இந்த வயதிலும் விஜய் ஸ்ரீ இயக்கிய ஹரா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் சாருஹாசன்.

நடிகர் சாருஹாசனுக்கு மூன்று மகள்கள், அதில் ஒருவர் தான் சுஹாசினி. இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். சாருஹாசன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் புதிய சங்கமம், ஐபிசி 215 ஆகிய இரு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் சாருஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் தாதா 87 மற்றும் ஹரா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. 93 வயதிலும் நடித்து வந்த சாருஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் தந்தையை கட்டியணைத்தவாரு புகைப்படம் எடுத்துக்கொண்ட சுஹாசினி, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய தந்தைக்கு மருத்துவ வெக்கேஷன், மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் மகள்களின் கவனிப்புடன் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version