Tamil News

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள்

பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்றஅறிவியல் இதழில் வெளியாகிஉள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தெரிகிறது.

Mercury has a layer of diamond up to 10 miles thick, scientists suggest

அதீத வெப்பநிலை மற்றும்அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள கார்பன், சிலிக்கா, வைரம் உள்ளிட்டவை உருகிய நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஏராளமான வைரம் இருப்பதால் இதைத் தேடி மனிதர்கள் அங்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும், அவ்வளவு சுலபமாக அங்குள்ள வைரத்தைவெட்டி எடுக்க சாத்தியம் இல்லை. எனினும் புதன் கிரகத்தின் காந்தப்புலம் அல்லது புவியியல் கட்டமைப்புகள் குறித்து தெரிந்துகொள்ள இது உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

நாசாவின் மெசஞ்சர் விண்கலம் முதல் முறையாக புதன் கிரகத்துக்கு சென்று ஆய்வு செய்தது. இதில் கிடைத்த தகவல்களை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version