Site icon Tamil News

பிரித்தானியாவில் அடுத்து வரக்கூடிய 10 நாட்களில் கடும் மழைக்கு வாய்ப்பு!

பிரித்தானியாவில் வரும் 03 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என Met office  அறிவித்துள்ளது.

குறித்த மழையுடன் கூடிய வானிலையானது எதிர்வரும் 10 நாளைக்கு நீட்டிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத சராசரி மாதாந்திர மழைப்பொழிவு 47மிமீ ஆகப் பதிவாகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை பொதுவாக 21C இன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் போது “கனமான, இடியுடன் கூடிய மழை” நாட்டை பாதிக்கும் வாய்ப்பையும் வானிலை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மேலும் மாறக்கூடிய நிலைமைகளுக்கு ஏற்ப வானிலையில் மாற்றம் ஏற்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version