Site icon Tamil News

உலகிலேயே மெதுவாக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் முதலிடம் பிடித்த லண்டன்

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது.

லண்டனில் மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக தெரியவந்து.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாம்டாம் என்ற இருப்பிடம் கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் லண்டனே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நாட்டின் டப்ளின், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலன், பெருவின் லிமா ஆகிய நகரங்கள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் உள்ளன.

பிரித்தானியாவிலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக மேன்செஸ்டர் நகரில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன

Exit mobile version