Tamil News

போலியோவை தடுக்க காசாவில் போர் நிறுத்தம் ; இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

Polio vaccination to begin on Sunday amid limited pause in fighting: WHO

இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்கர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்நிலையில் காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது போர் தொடங்கியதிலிருந்து 90% காசா மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம் காசா குழந்தைகளிடையே போலியோ நோய் பரவல் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, ஐநா கூறியுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, போலியோ நோய் மீண்டும் பரவியுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் முன்வந்திருக்கிறது. இந்த மூன்று நாட்களில் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை ஐநா சுகாதார செயற்பாட்டாளர்கள் செலுத்துவார்கள்.

Exit mobile version