Tamil News

கேப்டன் மில்லர் படத்தில் எதிர்பாராத திருப்பம்!! விலகிய நடிகர்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னண நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், உறியடி விஜய்குமார், உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி நடிக்க ஒப்பந்தமானதாகவும், ஆனால் அவர் இப்போது படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் நாளை அதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகிறது. படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Exit mobile version