Site icon Tamil News

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடும் முறை மற்றும் அளவுகள் பற்றி பதிவில் பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதில் சிறு பயம் இருக்கும் அதற்காக பழங்களை அறவே தவிர்த்து விடக் கூடாது, ஏனென்றால் நாம் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் ,விட்டமின்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பழங்களில் நிறைந்துள்ளது.

பழங்களில் உள்ள ப்ரக்டோஸ் கல்லீரலுக்குச் சென்று பிறகுதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது அதனால் பழங்களை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பழங்களை சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரிசி வகை உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அளவை ஒப்பிடும்போது பழங்களில் மிகக் குறைவு தான். மேலும் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

பழங்களை எடுத்துக் கொள்ளும் முறை:
சர்க்கரை நோயாளிகள் பழங்களை எக்காரணத்தைக் கொண்டும் ஜூஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதை தோலுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும்.

பழங்களை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இரு உணவு இடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் பழங்களை சுழற்சி முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு நாள் கொய்யா எடுத்துக் கொண்டால் மற்றொரு நாள் நாவல் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும் இப்படி மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளவும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிற பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கும் இப்படி மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளும் போது எல்லா சத்துக்களும் உங்களுக்கு கிடைத்து விடும்.ஒரு நாள் ஒன்றுக்கு 100 கிராம் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மாவு சத்து உள்ள பழங்களை சாப்பிடலாமா ?
மா, பலா, வாழை, பேரிச்சம்பழம் இந்த பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். இந்த பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதை சாப்பிடும் போது மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளவும் .

உதாரணமாக ஐந்து இட்லி காலையில் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதில் மூன்று இட்லி எடுத்துக்கொண்டு ஒரு 2 மணி நேரம் கழித்து ஒரு சிறிய பழம் எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு இரண்டு மணி நேர இடைவேளைக்கு பிறகு மதிய உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் நன்கு பழுத்த பழத்தில் கிளைசிமிக் அளவு அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை அளவு உடனடியாக உயர்த்தப்படும்.சர்க்கரை நோயாளிகள் துவர்ப்பு சுவை அதிகம் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

ஆகவே சர்க்கரை நோயாளிகள் அனைத்து பழங்களுமே சாப்பிடலாம் ஆனால் அதன் அளவுகள் மற்றும் சாப்பிடும் முறைகளில் கவனமாக கையாள வேண்டும்.

Exit mobile version