Site icon Tamil News

பெண்களின் கேரவன்களில் கேமராக்கள் – நடிகை ராதிகா சரத்குமார் குற்றச்சாட்டு

கடந்த 2017ம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர்.

அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரவன் (நடிகர், நடிகைகள் ஓய்வெடுக்கும் வண்டியின் அறை)களில் கேமரா மறைத்து வைத்து விடியோ எடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

” நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து துறைகளிலும் உள்ளது. மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகு அதுகுறித்து விசாரித்த போதுதான், அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன்.

இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இங்கு சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version