Tamil News

‘டிமான்டி காலனி 2’ உரிமையை கைப்பற்றியது BTG யுனிவர்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து மற்றும் அருள்நிதி கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘டிமான்டி காலனி’.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

DemonteColony2

இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அஜய் ஞானமுத்துவின் பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முழு உரிமையை BTG யுனிவர்ஸ் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Exit mobile version