Site icon Tamil News

தாய்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்!

தாய்லாந்து பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாயாவின் சிவப்பு விளக்கு நகரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பயணி, தங்கள் பில்லில் 60 பவுண்ட்ஸ் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த காவலர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காவலர்களிடம் தாக்குவதை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பில் சுற்றுலா பயணி ஒரு தனது இரு கைகளையும் உயர்த்தி தாக்க வேண்டாம் எனக் கோருகிறார்.

இருப்பினும், காவலர்களில் ஒருவர் அவரைத் தொடர்ந்து தலையில் உதைத்தார், இதனால் பாதிக்கப்பட்டவர் பல நிமிடங்கள் தரையில் அசையாமல் இருந்தார்.

அந்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர். எனினும், அவரது உடல்நிலை குறித்து போலீசார் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு பொலிஸார், :பாதுகாவலர்கள் சம்பவத்தை தடுத்து, போலீசில் புகார் செய்திருக்க வேண்டும். இத்தொழிலில் பணிபுரிபவர்கள், தங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து, மக்களை தாக்குவதை விட, சம்பவங்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Exit mobile version