Site icon Tamil News

நீண்ட நாட்களின் பின் பொதுமக்களை சந்திக்க தயாராகும் பிரித்தானிய இளவரசி கேட்!

பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் பொதுமக்களுக்கு முன் தோன்ற தயாராகியுள்ளார்.

புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு முதல் முறையாக மக்களை அவர் மக்கள் முன் தோன்றியுள்ளார்.

5 மாதங்களுக்கு முன் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதில் தமக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

அப்போதிலிருந்து இளவரசி chemotherapy எனும் புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

சுகாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் பொதுமக்களிடையே தோன்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் முழுமையாகக் குணமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய லண்டனில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் “Trooping the Colour” எனும் ராணுவ அணிவகுப்பில் தம்முடைய 3 பிள்ளைகளுடன் இளவரசி கேட் கலந்துகொள்ளவிருக்கிறார்.

பிரித்தானிய மன்னரின் சடங்குபூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும் அந்த அணிவகுப்பு இன்று நடைபெறும்.

மன்னர் சார்ல்ஸ், ராணி கமிலியா, குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் ஆகியோரும் அணிவகுப்பில் கலந்துகொள்வர்.

Exit mobile version