Tamil News

நவல்னி மரணம் தொடர்பில் சம்மன் அனுப்பியுள்ள பிரித்தானியா

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் தொடர்பில் பிரித்தானிய சம்மன் அனுப்பியுள்ளது.

2020ஆம் ஆண்டில் அலெக்ஸி நவல்னி விமானப் பயணத்தின்போது விஷ அமிலம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து ஜேர்மனியில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், 2021ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்குள் நுழைந்தார்.

ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Britain summons Russian diplomats after death of Navalny | World News -  Times of India

உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக ரஷ்யா கூறியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.குறிப்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் புடின் கொன்றுவிடுவார் என கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், அலெக்ஸி நவல்னி மரணத்திற்கு ரஷ்யா முழு பொறுப்பு என்பதை தெளிவுபடுத்துவதற்காக, அந்நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு பிரித்தானிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, ரஷ்ய மக்கள் விரும்பும் சுதந்திரத்தை நவல்னி பெற்றுத் தருவார் என்ற அச்சத்தில் அலெக்ஸி நவல்னி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பிரித்தானிய தரப்பு சுட்டிக் காட்டியது.

Exit mobile version