Site icon Tamil News

பிரித்தானிய வீதிகளில் முரட்டுத்தனமாக வாகன ஓட்டும் BMW வாகன ஓட்டுநர்கள்

பிரித்தானிய வீதிகளில் முரட்டுத்தனமான வாகன ஓட்டுநர்களாக BMW வாகன ஓட்டுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாம் இடத்தில் Audi உரிமையாளர்கள் உள்ளதாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாக்களிக்கப்பட்டவர்களில் பாதி பேர் BMW ஓட்டுநர்கள் மிகவும் விரும்பத்தகாதவர்கள் என்று கூறியுள்ளனர், அதே நேரத்தில் Audi ஓட்டுநர்கள் இந்த வகையில் 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

முரட்டுத்தனமான வாகன ஓட்டும் வாகனங்களில் முதல் ஐந்து இடங்களை மெர்சிடிஸ் பென்ஸ் 17 சதவீதம், லேண்ட் ரோவர் 15 சதவீதம் மற்றும் போர்ஷே 11 சதவீதமாகவும் இடம்பிடித்துள்ளனர்.

ஒழுங்கான முறையில் வாகனம் ஓட்டுபவர்களில் Ford வாகன ஓட்டிகள் 21 சதவீத வாக்குகளைப் பெற்றனர், அதைத் தொடர்ந்து கியா 16 சதவீதம், டொயோட்டா மற்றும் நிசான் 15 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.

BMW ஓட்டுநர்கள், நடுப் பாதையில் வளைந்து செல்வதாக இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, BMW ஓட்டுநர்கள் திடீரென பிரேக் அடித்து பின்னால் இருப்பவரைப் பயமுறுத்துவது 34 சதவீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாகனத்தை முந்தி செல்ல முயற்சிப்பதாக 25 சதவீதம் குறிப்பிட்டுள்ளதுடன், BMW ஓட்டுநர்கள் கடைசி நிமிடம் வரை ஒன்றிணைக்காமல் இருப்பதாக 35 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version