Site icon Tamil News

பிரித்தானியாவில் சுப்பர் மார்க்கெட்களில் திருடும் பறவை – அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் கடற்பறவை (Seagull) ஒன்றுக்கு அங்கு நுழைவதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மார்க்கெட்களில் திருடும் கடற்பறவைக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“Steven Seagull” என்று அழைக்கப்படும் பறவை கடந்த 6 ஆண்டாகக் கடையிலிருந்து உருளைக்கிழங்கு சிப்ஸைத் திருடுகிறது.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஸ்டீவன் சுமார் 30 சிப்ஸ் பொட்டலங்களுடன் பறந்துள்ளது. குறிப்பாக அதற்கு ‘ BBQ beef’ ரக சிப்ஸ் மிகவும் பிடிக்கும் என்று கடையின் மேலாளர் ஸ்டுவர்ட் ஹார்மர் (Stuart Harmer) கூறினார்.

சிப்ஸை எடுத்து ஸ்டீவன் கடைக்கு வெளியே அதன் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களைக் கதவை மூடும்படி வலியுறுத்திக் கடையெங்கும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கதவு மூடியிருந்தால் அதனைக் கடற்பறவை அலகால் தட்டுகிறது. காரமான சிப்ஸை வைத்து ஸ்டீவனை ஏமாற்றலாம் என்று எடுக்கப்பட்ட முயற்சியும் வீணானது.

என்ன செய்தாலும் ஸ்டீவன் அதற்குப் பிடித்த சிப்ஸை எடுத்தது. “கடற்பறவை காரணமாக சிப்ஸ் பொட்டலங்கள் சீக்கிரம் முடிந்துவிடுவதை எப்படி அதிகாரிகளிடம் புரியவைப்பது? நான் கேளிக்கையாகப் பேசுகிறேன் என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்று ஹார்மர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version