Site icon Tamil News

சிங்கப்பூரில் பறவைக் காய்ச்சல் அச்சம் – பறவைகள் தொடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

சிங்கப்பூரர்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பறவைகளைத் தொடுவதையோ, அவற்றுக்கு உணவளிப்பதையோ தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

H5N1 பறவைக்காய்ச்சல் இங்குப் பரவாமல் தடுக்க அந்த ஆலோசனை தரப்படுகிறது. இதுவரை இங்கு யாருக்கும் அந்த நோய் பரவியதாகத் தகவல் இல்லை. ஆயினும் கவனமாக இருப்பது முக்கியம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது.

விலங்குநல மருத்துவச் சேவையும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் இந்த வட்டாரத்தில் பறவைக் காய்ச்சல் நிரந்தர நோயாக இருப்பதாகத் தெரிவித்தன.

Exit mobile version