Site icon Tamil News

பீகாரின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்

சமீப ஆண்டுளாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் கௌரவத்தை அரசாங்கமும் சில தனியார் அமைப்புகளும் வழங்கி வருகிறது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் வசிக்கும் மான்வி மது கைஷ்யப் என்ற திருநங்கை சப் இன்ஸ்பெக்டருக்கான தேர்வு எழுதி, அதில் வெற்றிப்பெற்று முறையாக பீகார் மாநிலத்தின் சப் இன்ஸ்பெட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பீகாரின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்.

சிறுவயதில் மான்வி மதுகாஷ்யப்தான் ஒரு திருநங்கை என்று தெரிந்துக்கொண்டதும் சமூகத்தால் பல வேதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். பல சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இருப்பினும் தற்போது அவர் பெற்றுள்ள வெற்றிக்கு முன், அவர் பட்ட சிரமங்களும் வேதனைகளும் தவிடுபொடியாகிவிட்டது என்கிறார். இந்நிலைக்கு அவர் வருவதற்கு அவரது பெற்றோர்கள் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

இவருடன் சேர்த்து மேலும் இரு திருநங்கைகளும், ஒரு திருநம்பியும் சப் இன்ஸ்பெக்டர்களாக பீகாரில் பணிபெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version