Tamil News

“ஐயோ சாமி.. என் குடும்பத்தை விட்டுருங்கபா…” முதன்முறையாக மனம் திறந்த ஐஷு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் சர்ச்சையில் சிக்கி பாதியிலேயே வெளியேறிய ஐஷு, மனம் வருந்தி போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த கடிதத்தில், பல விஷயம் குறித்து ஐஷு பகிர்ந்து கொண்டுள்ளார்.

“அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக உணர்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு சிறந்த ஒரு வாய்ப்பை கொடுத்த போதிலும், அதனை நான் கெடுத்து விட்டேன். என்னை போன்ற பல இளம் பெண்கள் இதுபோன்ற வாய்ப்புக்காக கார்த்திருக்கிறார்கள். இதுபோன்ற பொன்னான வாய்ப்பு கிடைத்தும் இதன் மூலம் நான் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும், சக பெண்களுக்கும் அவப்பெயரை தேடி கொடுத்துவிட்டேன்.

என் மீது எனக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. ஒருவரை விரும்புவது, விரும்பப்படுவது, மிகவும் வெறுக்கப்படுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன் அவர்கள், விச்சும்மா, பிரதீப்,அர்ச்சனா, மணி ஆகியோர்களிடம் நான் மனதாரா மன்னிப்பு கேட்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சந்திக்கும் சக போட்டியாளரை எவ்வளவு நேசித்தாலும், மதித்தாலும், அவர்களைப் பற்றி எப்போதும் எதிர்மறையான விஷயங்களை சொல்ல வைக்கிறார்கள். இதனால் நீங்கள் பொய் பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர் இல்லை என்பது இப்போது தெளிவாக தெரிகிறது.

கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என்னை கண்மூடித்தனம் ஆகிவிட்டது. எனக்கு கிடைத்த முதல் பெரிய மேடை இதுதான். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது கொள்வது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. நான் செய்த தவறுக்காக என் குடும்பத்தினர் அவமானங்களை சந்திக்க கூடாது தயவு செய்து என் குடும்பத்தை விட்டு விடுங்கள்.

சமூக ஊடகங்களில் என்னை பற்றிய கருத்துக்களும், வீடியோக்களும் வெளியாவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கற்களை என் மீது எவ்வளவு வேண்டுமானாலும் எறியுங்கள். ஆனால் தயவு செய்து என் குடும்பத்தை விட்டு விடுங்கள். இன்று வரை என்னை வளர்ப்பதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்து கொள்ளும் வரை அளவுக்கு தள்ளிவிட்டது.

பிரதீப்பின் ரெட் கார்டு விஷயம் குறித்து பேசியுள்ள ஐஷு, பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்க கூறியதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். அவருடைய நல்ல எண்ணம் இப்போது எனக்கு புரிகிறது. என்னுடைய எபெக்ட் எனக்கு பிறகு ஆவது நிக்சன் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். சில சமயம் நான் இந்த நிகழ்ச்சியில் தவறான வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் அதற்காக வருந்துகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து, என் வீட்டில் காத்திருந்தவர்களுக்கு அவமானத்தை தேடி தந்துள்ளேன், என்னுடைய தவறான செயங்களை நானே வெறுக்கிறேன், சில நட்புகள் தவறான தொடர்புகள் மற்றும் நான் எடுத்த தவறான முடிவுகள் என் கண்ணை மறைத்து விட்டது, எது சரி… எது தவறு என்பதை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பின்னர், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தவறு என்பது அனைவரும் செய்வது தான், உங்களின் அடுத்தடுத்த முயற்சியில் கவனம் செலுத்துங்கள் வாழ்த்துக்கள் என கூறி தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version