Tamil News

டைட்டில் வின்னராக ஒரு கோடி கொடுத்தேனா? பதிலடி கொடுத்த அர்ச்சனா

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்து இருக்கிறது. இதுவரை நடக்காத ஒரு அதிசயமாக வைல்ட் கார்டு மூலமாக போன அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்.

அர்ச்சனா வெற்றி பெற முக்கிய காரணம் PR -bots என்றும் , பல லட்சம் செலவு செய்து தான் இந்த டைட்டில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அர்ச்சனா,

“பிக் பாஸ்ஸில் வெற்றி பெற்றதற்கு 50 லட்சம் தருகிறார்கள். ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும். இவ்வளவு செலவு செய்து வெற்றி பெறுவது சாத்தியமா?..”

“இவ்ளோ செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி வைத்து ஒரு படத்தை இயக்கி ஹீரோயினாக நடித்து விடுவேனே. நான் public response வைத்து தான் ஜெயித்தேன்” என்று அர்ச்சனா கூறியுள்ளார்.

Exit mobile version