Tamil News

மாளவிகா மோகனனுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட பூட்டான் தபால் நிலையம்… வைரல் புகைப்படம்!

பூடான் தபால் நிலையத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஸ்டாம்பில் ‘தங்கலான்’ பட கெட்டப்பில் இருக்கிறார் மாளவிகா. இந்தப் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இதுவரை தான் நடித்தப் படங்களிலேயே நடிப்புக்காக அதிகம் வேலை வாங்கிய படம் இதுதான் என்றும், தனக்குப் பிடித்தப் படம் ‘தங்கலான்’ என்றும் குறிப்பிட்டார்.

 

Malavika Mohanan immortalises her Thangalaan look on a Bhutanese stamp |  Tamil Movie News - Times of India

இந்தப் படத்தில் ‘ஆராத்தி’ என்ற கதாபாத்திரத்தில் மாளவிகா நடித்துள்ளார். இந்த கெட்டப்பில்தான் பூட்டான் நாட்டு தபால் நிலையம் அவருக்கு ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது. இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ‘பூட்டானில் உள்ள உள்ளூர் தபால் நிலையம் இந்த சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டுள்ளது. அங்கு நீங்கள் விரும்பும் புகைப்படத்தை பூட்டான் முத்திரையுடன் ஸ்டாம்பாக அச்சிடலாம்.

’தங்கலான்’ படத்தின் ரிலீஸ் மிக அருகில் இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆராத்தியின் நினைவாக இதை அச்சிட வேண்டும் என்று நினைத்து இதை செய்தேன். எனவே இந்த ஆண்டு பெரிய திரையில் நீங்கள் காணப்போகும் பயங்கரமான மற்றும் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களில் இவள் இருப்பாள். ஆற்றல், திறமை, வலிமை மற்றும் தனக்கே உரித்தான குரல் வளம் கொண்ட ஒருத்தி. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’ எனக் கூறியுள்ளார்.

Exit mobile version