Site icon Tamil News

வெதுவெதுப்பான நீருடன் நாளை தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் நீங்கள் பருகக்கூடிய தண்ணீரின் வெப்பநிலை 60°F முதல் 100°F (16°C to 38°C) வரை இருக்க வேண்டும். நீங்கள் பருகக்கூடிய தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அதிகப்படியாக குளிர்ச்சியான அல்லது சூடான தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

கோடைகாலமோ, குளிர்காலமோ நாள் முழுவதும் நம்மை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். பெரும்பாலான நபர்கள் குளிர்காலங்களில் குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள்; ஒரு சிலர் இந்த சீசனில் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே விரும்புவார்கள், குறிப்பாக காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீருடன் அவர்களது நாளை துவங்குவார்கள்.

ஆனால் இதில் இருக்கக்கூடிய கேள்வி என்னவென்றால், குளிர்கால காலைகளில் நாம் பருக்கக்கூடிய தண்ணீர் எவ்வளவு சூடாக இருக்க வேண்டும் என்பதுதான்? மனித உடலின் தேவைகளின் அடிப்படையில் நாம் பருகும் தண்ணீரின் சரியான வெப்பநிலை என்னவாக இருக்க வேண்டும்? காலை எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவது நல்லது.

நீரின் சரியான வெப்பநிலை– காலையில் நீங்கள் பருகக்கூடிய தண்ணீரின் வெப்பநிலை 60°F முதல் 100°F (16°C to 38°C) வரை இருக்க வேண்டும். நீங்கள் பருகக்கூடிய தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அதிகப்படியாக குளிர்ச்சியான அல்லது சூடான தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

கபம் : இருமல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். இந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இருமல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

பித்தம் : குளிர்காலத்தில் பித்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை அனுபவிப்பார்கள். இவற்றில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் ஒரு வித எரிச்சல் போன்றவை அடங்கும். மேலும் செரிமானமின்மை, மலச்சிக்கல், அசிடிட்டி, தூக்கமின்மை மற்றும் தோல் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வரலாம். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நீரின் வெப்பநிலையானது உடலின் வெப்பநிலைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும்.

வாதம் : குளிர்ந்த வானிலை, உணவு மற்றும் உறையக்கூடிய பகல் நேரம் போன்றவை வாத தோஷத்திற்கு சிறந்த நிலையாக கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவர் தண்ணீரை அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ந்த நிலையிலோ பருக கூடாது. நீங்கள் பருகும் நீரின் வெப்பநிலை 16°C முதல் 38°C வரை இருப்பதை உறுதி செய்யுங்கள்.

வெதுவெதுப்பான தண்ணீரை எப்படி பருக வேண்டும்? ஆயுர்வேதத்தை பொருத்தவரை காலை வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே பருகுவது நல்லதல்ல. அது உடல் நலத்தை பாதிக்கலாம். எனவே அதில் சிறிதளவு நெய் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பயனுள்ளதாக அமையும். பயணத்தில் ஈடுபட்டிருக்க கூடியவர்கள் சாதாரண வெப்ப நிலையில் இருக்கக்கூடிய நீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். எனவே இந்த குளிர் காலத்தை தினமும் வெதுவெதுப்பான நீருடன் துவங்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version