Site icon Tamil News

இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீரின் கோரிக்கைகளை மறுக்கும் BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஏனைய பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்ற நிலையில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தை வழங்கியுள்ளது.

அதில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பவுலிங் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பரிந்துரைத்த வினய் குமாரை பி.சி.சி.ஐ. ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸை நியமிக்க கவுதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதற்கு பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விரும்புகிறது.

அத்துடன் ஏற்கனவே பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் டி திலிப் சமீபத்திய வருடங்களில் நன்றாக செயல்பட்டுள்ளார். எனவே ஜான்டி ரோட்ஸ் மகத்தான ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இந்தியரை நியமிக்க விரும்புவதால் பி.சி.சி.ஐ. தங்களின் பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப்பே தொடர விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான மோர்னே மோர்கல் நியமிக்க கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கும் பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் கம்பீருடன் இணைந்து சேவையாற்றவுள்ள ஏனைய துணைப் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Exit mobile version