Site icon Tamil News

வங்காளதேசத்தில் 400 காவல் நிலையங்கள் சூறையாடல்: 50 பொலிஸார் பலி!

வங்காளதேசத்தில் கடந்த 2 நாட்களில் 400 காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர்.

50 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் சூழலில், காவலர்கள் பாதுகாப்பை தேடி தஞ்சமடைந்தனர்.

இதனால், நாட்டிலுள்ள பல காவல் நிலையங்களில் போலீசாரே இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு முன்பு ஆட்சி செய்து வந்த, அவாமி லீக் அரசுக்கு நெருங்கிய நிலையில் இருந்த பல மூத்த அதிகாரிகளும் பதுங்கி கொண்டனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டாக்கா டிரிபியூன் பத்திரிகை தகவல் தெரிவிக்கின்றது.

ஆயுதங்களும், வெடிபொருட்களும் வன்முறை கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பட்டா, ஜாத்ரபாரி, வதரா, அபடோர், மிர்பூர், உத்தரா கிழக்கு, முகமதுப்பூர், ஷா அலி மற்றும் பல்டான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு உள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் தங்களுடைய பணியை சுதந்திரத்துடன் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

பிரதமா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் மேலும் 109 போ் உயிரிழந்தனர். .

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலர் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

Exit mobile version