Site icon Tamil News

அரச பயணமாக இந்தியா செல்லும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா செல்கிறார்.

டெல்லியில் அவரை இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசவுள்ளார். நாளை காலை ஷேக்ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

பின்னர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.

இந்த மாதத்தில் ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

Exit mobile version