Site icon Tamil News

நட்சத்திர வீரர்கள் இன்றி வெளியிடப்பட்ட பலோன் டி’ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்

கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர்.

கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி’ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

2024ம் ஆண்டிக்கான பலோன் டி’ஆர் விருது அக்டோபர் 28ந்தேதி வழங்கப்பட இருக்கிறது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.

2003ம் ஆண்டில் இருந்து தற்போதுதான் பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.

மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார்.

மெஸ்சி முதன்முறையாக 2006ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்னர்.

ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Exit mobile version