Site icon Tamil News

சமநிலையில் முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து T20 தொடர்

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகன் விருது வென்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் 19ம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version