Site icon Tamil News

அவுஸ்திரேலியா மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வீட்டு தேவையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை வெளிநாட்டு மாணவர்களிடம் 710 அவுஸ்திரேலிய டொலர்கள் அறவிடப்பட்ட விசா கட்டணம் இன்று முதல் 1600 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30, 2023 இல் முடிவடைந்த ஆண்டில் நாட்டிற்குள் குடியேற்றம் 60% அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது.

அவுஸ்திரேலியா விசா கட்டணத்தை இவ்வளவு பெரிய அளவில் உயர்த்தியிருந்தாலும், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர்களிடம் ஒப்பீட்டளவில் குறைந்த விசா கட்டணத்தை வசூலிக்கின்றன.

மேலும், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்க காட்ட வேண்டிய பணத்தின் அளவு மே மாதத்தில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவில் அறுபது இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விசா கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவு அவுஸ்திரேலிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியா தனது நாட்டின் பல்கலைக்கழகங்களில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து $36.4 பில்லியன் வருமானம் ஈட்டியது.

Exit mobile version