Site icon Tamil News

ஆஸ்திரேலியா- போலி விமானப் பயணங்கள்; ஒரு மில்லியன் பயணிகளை ஏமாற்றிய குவாண்டாஸ்

இல்லாத விமானப் பயணங்கள் தொடர்பில் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் மோசடியால், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பயணிகள் பத்தாயிரக்கணக்கில் வழங்கப்படாத சேவைகளுக்குப் பதிவு செய்திருந்தனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து குவாண்டாஸ் கடந்த ஆண்டு 120 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் (S$105.73 மி.) அபராதமாகவும் ரத்தான விமானப் பயணங்களுக்குரிய பயணச்சீட்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாகவும் செலுத்த ஒப்புக்கொண்டது.

பயணிகள் பயணச்சீட்டுகளை போலியான தளங்களின்வழி வாங்கியுள்ளனர் என்பது குறித்து தவறான தகவல் அளித்ததன் தொடர்பிலும் ஆஸ்திரேலியாவின் விமான நிறுவனமான குவாண்டாஸ் ஒப்புக்கொண்டது.

இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கிடையே விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் 2023ஆம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார்.

நுழைவுச்சீட்டு வாங்குவது தொடர்பான குறைபாடு குறித்து முதன்முதலில் ஆஸ்திரேலிய போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் இந்த வழக்கைக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இதற்குமுன் விதிக்கப்படாத அளவுக்கு 250 மில்லியன் ஆஸ்திரேலிய டொலரை விமான நிறுவனத்துக்கு அபராதமாக விதிக்க அது கோரியிருந்தது.

இதையடுத்து, செப்டம்பர் 26ஆம் திகதி உறுதிசெய்யப்பட்ட தகவல்கள், ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பயணிகள் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் அனைத்தையும் குவாண்டாஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து மூத்த மேலாளர்களும் அறிந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version