Site icon Tamil News

2027 இல் ட்ரில்லியனராக ஆகுவதற்கான பாதையில் உள்ள ஆசியாவின் செல்வந்தர்!

எலோன் மஸ்க் 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் டிரில்லியனராக ஆவதற்கான பாதையில் இருக்கிறார் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 53 வயதான மஸ்க், தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். அவரின் நிகர மதிப்பு $251bn (£191bn) ஆகும்.

இருப்பினும், இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமியின் கண்டுபிடிப்புகளின்படி, அவரது செல்வம் ஆண்டுக்கு சராசரியாக 110% வீதம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதாவது அவரது செல்வம் இதே வேகத்தில் வளர்ச்சியடைந்து வருமானால், அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் டிரில்லியனரை எட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 டிரில்லியன் டாலர் கிளப் – மஸ்க்கின் மின்சார கார் வணிகமான டெஸ்லாவை $669.3bn (£509.7bn) சந்தை மதிப்பில் வைத்துள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது – இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமியின் படி ஆண்டுக்கு 173.3% ஆகும்.

இதேவேளை இன்ஃபோர்மா கனெக்ட் அகாடமி, இந்திய வணிக நிறுவன நிறுவனர் கௌதம் அதானி, டிரில்லியனராக ஆவதற்கு மிக நெருக்கமான இரண்டாவது நபராக மதிப்பிட்டுள்ளது.

Exit mobile version