Site icon Tamil News

Asia Cup – இந்தியா அணி அதிரடி வெற்றி

ஆசியக்கோப்பை சூப்பர் 4 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சார்பில் விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவரும் சதம் அடித்த அசத்தினர்.

357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

Exit mobile version