Tamil News

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரா நீங்கள்: இந்த பிரச்சினைகள் வரலாம்!

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரையில் ஹார்ட் வேர்க் செய்வதை விட ஸ்மார்ட் வேர்க் செய்வதை தான் புத்திசாலி தனமாக கருதுகிறார்கள். இதற்காக மணிக்கணக்கில் கணினி முன்பு உட்காந்திருப்பவர்கள் தான் அதிகம்.

அப்படி அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் நீண்டகால பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

5 TOP exercises for people who sit all day long | The Times of India

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வர்கள், அதிகளவிலான கலோரிகளை பெறுகிறார்கள் என ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த கலோரிகள் உடலிலேயே தங்குவதால் நாற்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கின்றது. அதுமாத்திரம் இல்லாமல் அளவுக்கு மிஞ்சிய உடல் அதிகரிப்பு மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

நீங்கள் குறைவாக நகரும் போது  உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளும் பாதிக்கப்படுகிறது. அவை இயக்கமின்மை காரணமாக கடினமாகிவிடும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

நீங்கள் அசையாமல் ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் போது, அது உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்தையும் பாதிக்கலாம், இது உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.

ஆகவே அதிமாக ஒரே இடத்தில் நேரத்தை செலவிடுவதை விட கிடைக்கும் நேரங்களில் கொஞ்சம் நடப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அதேநேரம் சீரான உடல் பருமனை பராமரிக்க யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை தவிர்க்காதீர்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் இன்றியமையாதது.

Exit mobile version