Site icon Tamil News

கால் மேல் கால் போட்டு உட்காருபவர்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

கால் மேல் கால் போட்டு அமருவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து விட்டது. அந்த காலத்தில் இவ்வாறு அமர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பார்கள். மேலும் இது மரியாதை குறைவான பழக்கம் எனவும் கூறுவார்கள் .இதனால் உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும் என அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

கால் மேல் கால் போட்டு அமருவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் ;
ஒரு மணி நேரத்திற்கு மேல் இவ்வாறு அமர்ந்திருந்தால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதை பற்றி 2010 ஆம் ஆண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட வேறு இணை நோய்கள் ஏற்படவும் வழி வகுக்கின்றது. அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தை தடை செய்து ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமருபவர்களுக்கு கீழ் உடல் பகுதியை விட மேல் உடல் பகுதிகளுக்கு அதிக ரத்த சுழற்சி ஏற்படுகிறது .இதனால் இதயம் அதிகமாக பம்ப் செய்யும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இதுவும் ரத்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரமாக கால் மூட்டுகள் மற்றும் தசைகள் ஒரே நிலையில் இருப்பதால் கால்களுக்கு கீழ் ரத்த ஓட்டம் தடை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இடுப்பின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

சில சமயங்களில் நரம்பு சுண்டி இழுக்கும் பிரச்சனை மற்றும் வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு பிரச்சனை வர முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அமரும் போது சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் அளவு ஏழு சதவீதமும் ,டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் அளவு இரண்டு சதவீதம் அதிகரிக்க கூடும் .

ஒரு நாளில் 3 மணி நேரத்திற்கு மேல் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் முதுகு வலி ,கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் தொடர்ந்து 10 – 15 நிமிடங்கள் காலை குறுக்காக போட்டு அமரக்கூடாது என இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் ஏன் இவ்வாறு அமர கூடாது தெரியுமா?

பெண்கள் இவ்வாறு அமர்ந்தால் அவர்களை திமிர் ,அகங்காரம், ஒழுக்கம் இல்லாதவள் என கூறுவதுண்டு, ஆனால் இதற்குப் பின்னால் ஒரு உட்பொருள் உள்ளது. நம் பெரியோர்கள் வார்த்தைக்குப் பின்னால் அறிவியல் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் இந்த நிலையில் அமர்ந்தால் அடிவயிற்றுப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் கருப்பை கோளாறுகள் எளிதில் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனால் இனிமேலாவது கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

Exit mobile version