Site icon Tamil News

ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம் அறிவிப்பு!

ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க குறிப்புகளையும் ஆப்பிள் வழங்குகிறது.

ஆப்பிள் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பல தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு உதிரி பாகங்கள், பழுது பார்க்கக்கூடிய கருவிகள் மற்றும் அதற்கான விளக்க புத்தகங்களை வழங்குகிறது.

தங்கள் சொந்த ஐபோன்கள் மற்றும் மேக்களை பழுதுபார்க்க விரும்பும் பயனர்கள், டிஸ்ப்ளே, பேட்டரி, கேமரா மற்றும் பல தேவையான பாகங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும். பிறகு ஆப்பிள் இந்த பாகங்களை பயனருக்கு அனுப்பும். மேலும், பயனர்கள் வாங்கக்கூடிய உதிரிபாகங்களில் தள்ளுபடியைப் பெற விரும்பினால், சேதமடைந்த பாகங்களை ஆப்பிள் நிறுவனத்திற்குத் திருப்பித் அனுப்ப வேண்டும்.

ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை 2022ம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களில் தொடங்கி தற்போது, ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியுள்ளது.

Exit mobile version