Site icon Tamil News

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை : விவசாயத்துறை அமைச்சர்

இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நாடுகள் உரிய தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை வன விலங்கு உரிமை தொடர்பான அமைப்புகளும் ஆர்வலர்களும் சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் விவசாய பொருட்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், எனினும் அவை எதுவும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் எவரும் வழங்கவில்லை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version