Site icon Tamil News

லண்டன் – புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த எதிர்ப்பு ; ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிஷப்

லண்டனில், நேற்று காலை, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்லும் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்த நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து திருச்சபை பிஷப் ஒருவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

நேற்று காலை, லண்டனிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலரை, மிதவைப்படகில் ஏற்றுவதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது.

தகவலறிந்த உள்ளூர் மக்கள், அந்த பேருந்தை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் புலம்பெயர்ந்தோரை பேருந்தில் ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்கள். அத்துடன், புலம்பெயர்ந்தோரை ஏற்ற முயன்ற பேருந்தின் டயர்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இங்கிலாந்து திருச்சபை பிஷப்பான Right Rev Rose Hudson-Wilkin, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.மேலும் சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்பவர்களுக்கு கருணை காட்டுபவர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செயல் காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இவர் மறைந்த எலிசபெத் மகாராணியின் chaplain ஆகவும், நாடாளுமன்ற கீழவையின் chaplain ஆகவும் பணியாற்றியவர்.

Exit mobile version