Tamil News

ரிலீஸானது பிரஷாந்தின் அந்தகன்… பாலாபிஷேகம், வெடி என பட்யை கிளப்பி ரசிகர்கள்

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது. அதன் பின்னர் படக்குழு தரப்பில் இருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரிலீஸான அந்தகன் படத்தினை படத்தின் நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

படத்தினை ரசிகர்களுடன் காண நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளனர். நடிகர் பிரசாந்த் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் தியேட்டர் வாசலில் 1000 வாலா வெடி வைத்து கொண்டாடினர். அதேபோல் ட்ரம்ஸ் வாசித்து ஆட்டம் ஆடினர்.

Exit mobile version