Site icon Tamil News

எதிர்பார்த்ததை விட வேகமாக உருகும் அண்டார்ட்டிக்கா பனிப்படலங்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

அண்டார்ட்டிக்கா பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள பனிப்படலம் வேகமாக உருவாக ஆரம்பித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் அவை உருகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் உலகளவில் கடல்நீர் மட்டம் உயரக்கூடும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

முன்னைய ஆய்வுகளில் சொல்லப்பட்டதைவிட வேகமாகப் பனிப்படலங்கள் உருகிவருவதாக ஆய்வொன்று கூறுகிறது.

78 பனிப்படலங்களின் விவரங்களைத் தொகுத்து கடந்த 1,000 ஆண்டுகளில் அவற்றின் தட்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

துருவங்களுக்கு அருகே இருக்கும் பகுதிகள், பூமியின் மற்ற பாகங்களைவிட மிக வேகமாக உருகுவதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்டார்ட்டிக்கா கண்டத்திற்கு அதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.

மேற்கு அண்டார்ட்டிக்கா முன்னர் கணிக்கப்பட்டதைவிட இருமடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றால் கடல் நீர்மட்டம் பல மீட்டர் உயரத்திற்கு அதிகரிக்கலாம்.

Exit mobile version